முதல்-மந்திரி பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் மோதிக் கொள்வது ஏன்? - மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேள்வி
ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் மோதிக் கொள்வது ஏன்? என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
பிரகலாத் ஜோஷி
கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே முதல்-மந்திரி பதவிக்காக போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் முதல்-மந்திரி பதவிக்காக மோதிக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
கனவு பலிக்காது
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அப்படி இருந்தும் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பது ஏன்?. என்று தெரியவில்லை. முதல்-மந்திரி பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. நாட்டில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு சாத்தியமே இல்லை.
பா.ஜனதாவுக்குள் மோதல் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி மக்களை திசை திருப்பினார்கள். தற்போது அவர்களே மோதிக் கொள்வது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மந்திரி யோகேஷ்வர் என்ன தேர்வு எழுதினார், எதற்காக தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்வது, கர்நாடகத்தில் மத்திய மந்திரி பதவி யாருக்கு கிடைக்கும் என்பது நான் சொல்ல முடியாது. அதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story