அரியலூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி


அரியலூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 29 Jun 2021 1:51 AM IST (Updated: 29 Jun 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இறந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 68 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 82 பேர் கொரோனாவில் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 592 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 859 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி 3,437 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Next Story