வன்னியப்பர் கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


வன்னியப்பர் கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 29 Jun 2021 1:53 AM IST (Updated: 29 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான வன்னியப்பர் கோவில் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த கோவிலை அரசு புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தந்தி டி.வி.யில் இந்த கோவில் குறித்து சிறப்பு தொகுப்பு கடந்த வாரம் வெளியானது.
இந்த நிலையில் ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் வன்னியப்பர் கோவிலுக்கு வருகை புரிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தந்தி டி.வி.யில் இந்த பழமைவாய்ந்த வன்னியப்பர் கோவிலின் புராதன சிறப்புகளை கண்டேன். அதைத்தொடர்ந்து நேரடியாக வந்து இந்த கோவிலை பார்வையிட்டேன். கும்பாபிஷேகம் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் இதனை உடனடியாக பார்வையிட்டு பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்கக்கோரி பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முருகேசன், ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் சங்கர், தொகுதி பொறுப்பாளர்கள் ராதா, கணபதி, பழக்கடை மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story