கர்நாடகத்தில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தோ்வு முடிவுகள் வெளியீடு - மந்திரி சுரேஷ்குமார்
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான தோ்வு முடிவுகள் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் வௌியிடப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஜூலை 2-வது வாரத்தில் முடிவுகள்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவி
களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவ, மாணவிகளின் மதிப்பெண் முடிவுகளை ஜூலை 30-ந் தேதிக்குள் வௌியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதிப்பெண் முடிவுகளை அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். எந்த ஒரு மாணவ, மாணவியும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்பு அவர்கள் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மாணவ, மாணவிகளுக்கு அந்த முடிவுகள் மீது விருப்பம் இல்லை என்றாலோ, அல்லது கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன் என்று கூறினாலோ தோ்வுகள் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைன் வகுப்புகள்
எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படாத வண்ணம் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும். தோ்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் பள்ளி, கல்வித்துறை விரிவாக ஆலோசித்து மதிப்பெண் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆனால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வித்யாகமா திட்டத்தின் மூலம் பாடம் நடத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story