தென்காசியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார செயலாளர் அயூப்கான், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவேங்கடம் மெயின் பஜாரில் உள்ள காந்தி மண்டபம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர்கள் அந்தோணிராஜ் (இந்திய கம்யூனிஸ்டு), வேணுகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கனியமுதன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாக குழு சுப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உச்சிமாகாளி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட இலக்கிய அணி இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story