2 நகை கடைகளுக்கு சீல்


2 நகை கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 29 Jun 2021 2:24 AM IST (Updated: 29 Jun 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் அரசின் தடை உத்தரவை மீறி இயங்கிய 2 நகை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கும்பகோணம்;
கும்பகோணத்தில் அரசின் தடை உத்தரவை மீறி இயங்கிய 2 நகை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 
நகை கடைகள்
கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில் கும்பகோணம் சாரங்கபாணி கீழ சன்னதி பகுதியில் இயங்கி வரும் பிரபல நகை கடையில் அரசு தடை உத்தரவை மீறி முன்பக்க கதவை அடைத்துக்கொண்டு பின் பக்க கதவு வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து நகை வியாபாரத்தில் ஈடுபடுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சீல் வைப்பு
இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள நகை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 2 பிரபல நகை கடைகளில் அரசு உத்தரவை மீறி நகை விற்பனை நடைபெறுவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 நகை கடைகளுக்கும் நகராட்சி ஆய்வாளர் டேவிட் பாஸ்கர ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 உரிமம் 
இது குறித்து நகராட்சி ஆய்வாளர் டேவிட் பாஸ்கரராஜ் கூறியதாவது:- கும்பகோணத்தில் அரசு தடை உத்தரவை மீறி செயல்பட்ட 2 நகைகடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. 
 இதில் ஒரு நகைக்கடைக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு அவர்கள் அபராதம் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அந்த நகைக்கடை நிர்வாகத்தினர் வியாபாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகை கடையின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவர் அவர் கூறினார்.

Next Story