பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில வாலிபர்கள் கைது


பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 10:12 AM IST (Updated: 29 Jun 2021 10:12 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் கஞ்சா கடத்தி வந்ததாக ஓடிசா மாநிலத்தை சேர்ந்த மிதுன் (வயது 22) மற்றும் சீபு நந்தா (21) ஆகிய 2 வாலிபர்கள் மீது ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story