திண்டுக்கல்லில் ஒரே மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 9 மயில்கள் சாவு


திண்டுக்கல்லில்  ஒரே மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 9 மயில்கள் சாவு
x
தினத்தந்தி 29 Jun 2021 5:52 PM IST (Updated: 29 Jun 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஒரே மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 9 மயில்கள் இறந்துள்ளன.

திண்டுக்கல்:
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8 மணிக்கு திண்டுக்கல் வழியாக சென்றது. திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்து அனுமந்தநகர் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த பெண் மயில், ரெயில் வருவதை அறிந்து பறக்க முயன்றது. ஆனால் அதற்குள் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அந்த மயில் இறந்தது. 
இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று மயிலின் உடலை கைப்பற்றினர். இதையடுத்து வனத்துறையினரை வரவழைத்து மயிலின் உடலை அவர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில்களில், மயில்கள் அடிபட்டு இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக கொடைரோடு, அய்யலூர், வடமதுரை பகுதிகளில் மயில்கள் அதிகமாக உள்ளன. மேலும் தண்டவாளத்தின் அருகில் மேயும் போது ரெயிலில் அடிபட்டு அவை இறப்பது வழக்கமாக உள்ளன. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 மயில்கள் ரெயில்களில் அடிபட்டு இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் நேற்று, திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் அருகிலேயே மயில் அடிபட்டு இறந்துள்ளது.

Next Story