பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு


பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 6:25 PM IST (Updated: 29 Jun 2021 6:25 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு.

சென்னை,

தமிழக அரசு அறிவித்துள்ளபடி கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் சென்னை அரசு அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம். அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் உரிய முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிடலாம். அதேபோல் வகை 2 மற்றும் 3-ல் உள்ளடங்கிய அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் பழனி அருங்காட்சியகங்களையும் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story