5 killed in Corona in Dindigul district


5 killed in Corona in Dindigul district
x
தினத்தந்தி 29 Jun 2021 8:34 PM IST (Updated: 29 Jun 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் வரை 583 பேர் இறந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 46 வயது பெண், 63 வயது மூதாட்டி, 64 வயது முதியவர், தேனி அரசு மருத்துவமனையில் 40 வயது பெண், மதுரையில் தனியார் மருத்துவமனையில் 51 வயது ஆண் ஆகிய 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனா இறப்பு எண்ணிக்கை 588 ஆனது.
இதற்கிடையே நேற்று மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்து 561 ஆக உயர்ந்தது. அதேநேரம் 33 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 307 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story