உப்புக்கோட்டை பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்


உப்புக்கோட்டை பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 29 Jun 2021 9:05 PM IST (Updated: 29 Jun 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை பகுதியில் வெண்டைக்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

உப்புக்கோட்டை:
முல்லைப்பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெறும் கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதிகளான உப்புக்கோட்டை, கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, துரைசாமிபுரத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர், கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்வது வழக்கம். 
இப்பகுதியில் விளையும் காய்கறிகள் சுவையாக இருக்கும். இதனால் இப்பகுதி காய்கறிகளுக்கு தனிமவுசு உள்ளது. இந்தநிலையில் உப்புக்கோட்டை பகுதியில் கடந்த மாதம் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டது. 
தற்போது அவை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் உப்புக்கோட்டை பகுதியில் வெண்டைக்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story