உத்தமபாளையம் அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


உத்தமபாளையம் அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Jun 2021 9:19 PM IST (Updated: 29 Jun 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் வடக்கு காலனியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜ்குமார் (வயது 45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தம்பியின் மகன் திருமணத்திற்காக ராஜ்குமார் விடுமுறையில் கோகிலாபுரம் வந்தார். அங்கு கடும் முதுகுவலியால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜ்குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story