வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 குட்டிகளை ஈன்ற சதுப்பு நில மான்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 குட்டிகளை ஈன்ற சதுப்பு நில மான்
x
தினத்தந்தி 29 Jun 2021 9:46 PM IST (Updated: 29 Jun 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 குட்டிகளை ஈன்ற சதுப்பு நில மான்.

வண்டலூர்,

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதியிலிருந்து பார்வையாளர்கள் கண்டுகளிக்க தடை விதித்து மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதில் நீலா (வயது 9), பத்மநாபன் (12), ஆகிய இரண்டு சிங்கங்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இந்தநிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சதுப்பு நிலமான் என அழைக்கப்படும் ‘பாராசிங்கா’ என்ற மான் 2 குட்டிகளை கடந்த 11 மற்றும் 14-ந் தேதிகளில் ஈன்றுள்ளது.

இப்பூங்காவிலுள்ள சருகுமானும் கடந்த 9-ந் தேதியன்று அன்று குட்டியை ஈன்றுள்ளது. இன்றைய அளவில் இப்பூங்காவில் மொத்தம் 13 சருகு மான்கள் உள்ளன. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சிங்கவால் குரங்கு ஒரு குட்டியை ஈன்றுள்ளது.

புதியதாய் பிறந்த அனைத்து குட்டிகளும் தொடர்ந்து விலங்கு காப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளன.

இவ்வாறு பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story