நாமக்கல் மாவட்டத்தில் 13 போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 13 போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் செயல்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 13 போலீஸ் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் செயல்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
பெண்களுக்கான உதவி மையம்
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் ‘பெண்களுக்கான உதவி மையம்’ என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகளுடன் காவல்துறை கைகோர்த்து உள்ளது. இதன் ஒரு அங்கமாக ‘பெண்களுக்கான உதவி மையம்’ புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
அது தொடர்பான ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுஜாதா, ரவிக்குமார், செல்லப்பாண்டியன், குழந்தைகள் நலக்குழு அலுவலர் கோகிலவாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பேபி பிரிஸ்டில்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
24 மணி நேரமும்...
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 13 போலீஸ் நிலையங்களில் இந்த உதவி மையங்கள் செயல்படும். பெண்களுக்கு உதவ ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். பாதிக்கப்பட்ட மற்றும் உதவி தேவைப்படும் பெண்கள் இந்த உதவி மையத்தை அணுக 181 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story