நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தல்


நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jun 2021 10:29 PM IST (Updated: 29 Jun 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தி உள்ளார்.

நீடாமங்கலம்:-

நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தி உள்ளார்.

இணையவழி பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் குறித்த செயல்விளக்க பயிற்சி இணையவழியாக நடைபெற்றது. நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
சத்து பற்றாக்குறை என்ற நோய் உள்ளது. அந்த நோயை போக்க, ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டங்களை வீடுகளில் அமைக்க வேண்டும். உணவு உற்பத்தி குறைவாக இருந்ததால் தான் பசுமை புரட்சி வந்தது. சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து கொள்ளாததால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் சத்து குறைந்துவிடுகிறது.

சத்து குறைபாடு

சத்து குறைபாடு காரணமாக தோல்கள் சுருங்கி சிறு குழந்தைகள் வயதானவர்களை போல தெரிவார்கள். தண்ணீர் குடிக்கும் போது கைவிரல்கள் நீரில் படக்கூடாது. வீடு சிறிய இடத்தில் இருந்தாலும் நிலையான சத்துணவு தரும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான் நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து உண்ண முடியும். இவ்வாறு அவர் கூறினார். 
இதில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராதாகிரருஷ்ணன், ஜெகதீசன், செல்வமுருகன், சபாபதி, உதவி பேராசிரியர்கள் புனிதா, கமலசுந்தரி மற்றும் திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Next Story