சங்கராபுரத்தில் ரூ 2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது


சங்கராபுரத்தில் ரூ 2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 29 Jun 2021 10:33 PM IST (Updated: 29 Jun 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் ரூ 2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது


சங்கராபுரம்

சங்கராபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 11-வது வார்டுக்குட்பட்ட பொய்குணம் சாலையிலிருந்து பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் சாலை, 7-வது வார்டுக்குட்பட்ட பிள்ளையார் கோவிலில் இருந்து தீயணைப்பு நிலையம் செல்லும் சாலை, தியாகராஜபுரம் சாலையில் இருந்து வளம் மீட்பு பூங்கா வரை உள்ள சாலை ஆகிய 3 சாலைகள் புதியதாக அமைக்க ரூ.1 கோடியே 99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட 3 சாலைகளிலும் மண் மற்றும் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டது. கொரோனா பரவல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக 2 மாதங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சங்கராபுரம் பேரூராட்சி பகுதியை ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் 3 சாலைகளை அமைக்கும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதை சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டார்.

Next Story