விபத்தில் வைக்கோல் வியாபாரி பலி
விபத்தில் வைக்கோல் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது56). இவரும் ராமநாதபுரம் ஜோதி நகரை சேர்ந்த முத்துப்பிள்ளை மகன் சரவணன் (44) என்பவரும் சேர்ந்து வைக்கோல் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர்கள் 2 ேபரும் சிக்கல் பகுதிக்கு வைக்கோல் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் பாடுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உடல்நிலை கவலைக்கிடமாகவே சேகர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story