மாவட்ட செய்திகள்

அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை + "||" + Sale

அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை

அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை
அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை
அறந்தாங்கி, ஜூன்.30-
அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பொற்குடையார் கோவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் களப்பக்காட்டை சேர்ந்த  மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் மதன்குமார் (வயது 30),  பச்சலூரை சேர்ந்த முருகன் (24) ஆகியோர் கஞ்சா எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும்  கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல்  எல்.என்.புரம் சின்ன அண்ணா நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த சின்ன அண்ணா நகரை சேர்ந்த சகுந்தலா (33), காந்தி நகர் மணிமாறன் (19), எல்.என்.புரத்தை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை
தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை
2. சென்னையில் தங்கம் விலை உயர்வு; ஒரு பவுன் ரூ.35,880க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35,880க்கு விற்பனை செய்யப்படுகிது.
3. சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்று ரூ.35,688க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.35,688க்கு விற்பனை செய்யப்படுகிது.
4. விதவிதமாக தயாரிக்கப்பட்ட சிறுதேர்கள் விற்பனை
ஆடிப்பெருக்கை முன்னிட்டு விதவிதமாக தயாரிக்கப்பட்ட சிறுதேர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
5. நிக்கோடின் கலந்த பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து
நிக்கோடின் கலந்த பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி எச்சரித்தார்.