சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்ட விழிப்புணர்வு முகாம்
இளையான்குடி
இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் சாலைக்கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்ட சட்ட குழுவின் தலைவருமான நீதிபதி சுனில் ராஜா கலந்துகொண்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பற்றியும், அவ்வப்போது நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வது பற்றியும் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், வழக்கறிஞர்கள் சிவகுமார், கல்யாணி, அண்ணாதுரை, வேல்முருகன், பூ முருகன், சாலைக்கிராமம் காவல் இன்ஸ்பெக்டர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு இளவரசன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story