மல்லகுண்டா ஊராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு


மல்லகுண்டா ஊராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Jun 2021 10:45 PM IST (Updated: 29 Jun 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

மல்லகுண்டா ஊராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு

வாணியம்பாடி

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில், நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிவரும் பணியாளர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பகுதியையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story