கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
துடியலூர்
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து கோவை துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு பால மூர்த்தி தலைமை தாங்கினார். இதில், தொழிற்சங்க பிரதிநிதிகள் சமூக இடைவெளியுடன் நின்று பெட்ரோல், டீசல் உயர்வை உடனடி யாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கோஷமிட்டனர்.
இது போல் பெட்ரோல், விலை உயர்வை கண்டித்து கோவை, சின்னம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையிலும்,
ஆவாரம்பாளையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பீளமேடு நகர செயலாளர் பாண்டியன் தலைமையிலும், குனியமுத்தூரில் மாநில குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையிலும்,
மதுக்கரையில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் தலைமையிலும், பி.என்.புதூரில் மேற்கு மண்டல துணை செயலாளர் சந்திரன் தலைமையிலும், காந்திபார்க்கில் மேற்கு நகர செயலாளர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story