ஊட்டியில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்
ஊட்டியில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, நகை, துணிக்கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், கட்டாயம் முககவசம் அணிந்தும் பொருட்கள் வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று நகராட்சி சுகாதார அதிகாரிகள் நேற்று கடைகளில் சோதனை செய்தனர்.
முககவசம் அணியாமல் தொற்றை பரப்பும் வகையில் சிலர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து முககவசம் அணியாத 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story