கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை


கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை
x
தினத்தந்தி 29 Jun 2021 11:01 PM IST (Updated: 29 Jun 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் சிறுத்தை இறந்து கிடந்தது.

கோத்தகிரி

கீழ்கோத்தகிரி அருகே கடசோலை என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் தோட்டத்தில் அழுகிய நிலையில் சிறுத்தை இறந்தது கிடந்தது. இதுகுறித்து தேயிலை தொழிலாளர்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலையடுத்து கோத்தகிரி வனச்சரகர் சரவணன், வனவர்கள் சக்திவேல், திருமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 தொடர்ந்து நேற்று காலை நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் சரவணகுமார், கோவை உதவி வன அலுவலர் ராஜேஷ், முதுமலை வனவிலங்கு சரணாலய கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் விரைந்து வந்து சிறுத்தையின் உடலை வனவிலங்கு ஆர்வலர்கள் முன்னிலையில் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்த சிறுத்தைக்கு 2 வயது இருக்கலாம். அழுகிய நிலையில் கிடந்ததால் சிறுத்தை இறந்து 20 நாட்களுக்குமேல் இருக்கும். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவித்தனர்.  மேலும் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story