ஓட்டப்பிடாரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஓட்டப்பிடாரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2021 11:03 PM IST (Updated: 29 Jun 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் தேரடி திடல் முன் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அழகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராகவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.  

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், 10 கிலோ உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், மாநிலங்களுக்கு தடுப்பூசி தடையின்றி இலவசமாக வழங்க வேண்டும், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் சண்முகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story