மாவட்டத்தில், கடந்த 25 நாட்களில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 19 பேர் கைது குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் 4 டன் ரேஷன் அரிசியை கடத்திய 19 பேரை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை சிலர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி அவர்கள் கடந்த 25 நாட்களில் வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்ல வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
19 பேர் கைது
இது தொடர்பாக 19 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.இது தவிர அரசு மானியத்தில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரை வியாபார நோக்கில் பயன்படுத்திய 2 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசியை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story