கயத்தாறில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா சன்னதுபுதுக்குடி கிராமத்தில் 2-வது வார்டில் ஊர்மக்கள் வயல், தோட்டம், குளத்திற்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஊர்நாட்டாமைகள் சிதம்பரம், மாடசாமி ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் தாசில்தார் பேச்சிமுத்துவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்கிணறும் மக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் பஞ்சாயத்து மூலம் சீர்செய்யப்படும்’ என உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story