மருத்துவ பொருட்கள் வைத்திருந்த கட்டிடத்தில் தீ- ரூ.2 லட்சம் சேதம்


மருத்துவ பொருட்கள் வைத்திருந்த கட்டிடத்தில் தீ- ரூ.2 லட்சம் சேதம்
x
தினத்தந்தி 29 Jun 2021 11:16 PM IST (Updated: 29 Jun 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ பொருட்கள் வைத்திருந்த கட்டிடத்தில் தீ-ரூ.2 லட்சம் சேதம்

திருமயம்,ஜூன்.30-
திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தமான மருத்துவ பொருட்கள், கொசு மருந்து, நாப்கின்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. இதைபார்த்த மருத்துவ துறையினர்  திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்கள் எரிந்து நாசமாயின.

Next Story