அரக்கோணம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது


அரக்கோணம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 11:19 PM IST (Updated: 29 Jun 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். பழிக்குப் பழியாக கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரக்கோணம்

வாலிபர் வெட்டிக்கொலை

அரக்கோணத்தை அடுத்த மின்னல் பகுதியை சேர்ந்தவர் பஸ்வான் (வயது 28). இவர் நேற்று முன்தினம் மேல் ஆவதம் பகுதி பெட்ரோல் பங்க் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து  அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலையாளிகளை பிடிக்க அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வந்தனர்.

6 பேர் கைது 

அப்போது காட்டுபாக்கம் அருகே உள்ள காட்டில் சிலர் பதுங்கி இருந்தனர். அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேல் ஆவதம் பகுதியை சேர்ந்த அன்பு என்ற அன்பரசன் (23), சூர்யா என்ற சூர்யமூர்த்தி (23), ரஞ்ஜித் (20), சிவா (22), அஜித் என்ற சதீஷ் (24), விக்கி என்ற விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது.

மேலும் ஆவதம் பகுதியை சேர்ந்த லோகேஷ் கொல்லப்பட்ட வழக்கில் பஸ்வான் சம்மந்தப்பட்டிருந்ததால் அவருடைய உறவினர்களான இவர்கள் 6 பேரும் பழிக்குப் பழியாக, பஸ்வானை கொலை செய்ததாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story