மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்


மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்
x
தினத்தந்தி 29 Jun 2021 11:21 PM IST (Updated: 29 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்

 காரைக்குடி
காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகர்மன்ற தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 720 ஆக இருந்தது. இந்த வருடம் மாணவர் சேர்க்கை 1200-ஐ தாண்டியுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த இயலாமல் அரசு பள்ளிகளை நாடுவதாலும் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்கள் கூட்டம் அலை மோதியது. இதனை அறிந்த தொடக்க கல்வி அலுவலர் ஜோசப் செல்வராஜ் அப்பள்ளிக்குச் சென்று மாணவர் சேர்க்கையினை பார்வையிட்டு, மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச பாடப்புத்தகங்களை வழங்கினார். அவரிடம் பள்ளி தலைமையாசிரியை சாவித்திரி தியாகராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகானந்தம், பள்ளி மேலாண்மை குழுதலைவர் தெய்வானை ஆகியோர் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் தேவை எனவும், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக தொடக்க கல்வி அலுவலர் ஜோசப் செல்வராஜ் கூறினார்.

Next Story