திண்டிவனம் பகுதியில் கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடி


திண்டிவனம் பகுதியில்  கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடி
x
தினத்தந்தி 29 Jun 2021 11:27 PM IST (Updated: 29 Jun 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

6 பேர் கொண்ட கும்பல் கைது

திண்டிவனம், 

திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று மாலை திண்டிவனம்-மரக்காணம் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குபின்முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கார் புரோக்கர்களான விழுப்புரம் வி.அகரம் பகுதியை சேர்ந்த குப்பன் மகன் ராஜா (வயது 37), வாணியம்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் (53), கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆண்டிபாளையத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் சரண்ராஜ் (36), கடலூர் மாவட்டம் வழிசோதனைபாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஸ்ரீதர் (38) ஆகியோர் என்பதும், திண்டிவனம் நகராட்சி குடியிருப்பை சேர்ந்த சதீஷ், திண்டிவனம் ஈசுவரன் கோவில் தெருவை சோ்ந்த ஏகாம்பரம், பாரதிதாசன் நகர் காலேஜ் ரோட்டை சேர்ந்த ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான 3 கார்களை ஆக்டிங் டிரைவரான ரோஷணை காலனியை சேர்ந்த ராஜசேகர்(36) என்பவர் மூலம் வாடகைக்கு எடுத்து விழுப்புரம் காந்திநகர் பானாம்பட்டு ரோடு பகுதியை சேர்ந்த பழனி (53), தழுதாளியை சேர்ந்த ஆனந்த்(36) ஆகியோரிடம் அடகு வைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. 
இதையடுத்து கார்களை எடுத்து அடகு வைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட ராஜா உள்பட 6 பேரை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 3 கார்கள் மீட்கப்பட்டது. தலைமறைவாக உள்ள ராஜசேகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story