கண்ணமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கண்ணமங்கலம் பகுதியில்   கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 11:45 PM IST (Updated: 29 Jun 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் நேற்று புதுப்பேட்டை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, 10 லிட்டர் சாராயம் இருந்தது.  இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா, சாராயம், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

விசாரணையில் அவர்கள்  கொளத்தூர் புதிய காலனியைச் சேர்ந்த மதன் (வயது 25), மணிகண்டன் (24) என்பதும், வேலூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

Next Story