வடக்கிபாளையம் பிரிவு ஆ சங்கம்பாளையத்தில் விபத்தை ஏற்படுத்தும் ரெயில்வே மேம்பாலம்
பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ரெயில்வே மேம்பாலம்
பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு ஆ.சங்கம்பாளையத்தில் தண்டவாளத்தை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக ரூ.8 கோடியில் 250 மீட்டர் நீளம், 10.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் நேராக இல்லாமல் பயங்கர வளைவு உள்ளதாக இருக்கிறது.
எனவே இது சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளதாக ஏற்கனவே பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
பாலம் வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. நள்ளிரவு நடந்த விபத்தில்கூட ஒருவர் சிக்கி பலியானார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வளைவு பகுதி
வடக்கிபாளையம் பிரிவு ஆ.சங்கம்பாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் ஏறியதும், திடீரென்று வளைவு பகுதியில் வாகனங்கள் திரும்பும் வகையில் உள்ளது.
இதனால் பாலத்தில் வேகமாக வரும் வாகனங்களுக்கு வளைவு தெரியாது. அதில் மின்விளக்கு வசதியும் கிடையாது.
சிறிய அளவிலான ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு உள்ளதால், வளைவு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன.
கூடுதலாக நிலம் கையகப்படுத்தி பாலம் கட்டி இருந்தால் வளைவு பகுதியை குறைத்து இருக்கலாம்.
தடுக்க வேண்டும்
ஆனால் அதிகாரிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் பெயரளவிற்கு பாலத்தை கட்டி முடித்து விட்டனர்.
எனவே அங்கு ஒளிரும் ஸ்டிக்கர் களை ஒட்டுவதுடன், அதிகாரிகள் ஆலோசனை செய்து விபத்துகள் நடப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story