திருச்சபை இடத்தை ஆக்கிரமித்ததாக கூறி கிறிஸ்தவர்கள் போராட்டம்
திருச்சபை இடத்தை ஆக்கிரமித்ததாக கூறி கிறிஸ்தவர்கள் போராட்டம்
குடிமங்கலம்:
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட முகவனூர், சிந்திலுப்பு, அனிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தென்னிந்திய திருச்சபைக்கு (சி.எஸ்.ஐ.) சொந்தமான இடம் உள்ளதாகவும் சிலர் ஆக்கிரமித்ததாகவும கூறப்படுகிறது. திருச்சபைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்க படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குடிமங்கலம் ஒன்றியம் முகவனூர் பகுதியில் உள்ள திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் கட்டுமானபணியில் ஈடு பட முயன்றார். இதைக்கேள்விப்பட்ட திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரண்டு வந்து பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இது தவிர குடிமங்கலம் பகுதியில் உள்ள சிந்திலுப்பு, அணிக்கடவு கிராமத்திலும் திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதாக கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ஓ. தலைமையில் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story