இடப்பிரச்சினை தகராறில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு; பெண் மீது தாக்குதல்
தா.பழூர் அருகே இடப்பிரச்சினை தகராறில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பெண் தாக்கப்பட்டார். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரிவாள் வெட்டு
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த மேலமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மனைக்கட்டுக்கு வேலி அமைக்கும் பணியை செய்ய முயன்றபோது, இடப்பிரச்சினை சம்பந்தமாக ஆரோக்கியசாமியின் தம்பி ஜான்பால் என்பவர், தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் தாக்கியதில் ஆரோக்கியசாமிக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதை தடுக்க சென்ற அவரது மகன் சின்னப்பனுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னப்பன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் ஜான்பால், அவரது மனைவி விமல்ராணி ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வழக்குப்பதிவு
அதே பிரச்சினையில் ஆரோக்கியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரான சின்னப்பன், சலோமியா, லூசியா ஆகியோர் ஜான்பாலின் மனைவி விமல்ராணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story