திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகாததால் அவை குப்பையில் கொட்டப்பட்டன.
திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகாததால் அவை குப்பையில் கொட்டப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகாததால் அவை குப்பையில் கொட்டப்பட்டன.
விற்பனை பாதிப்பு
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இங்கு சேலம், நாமக்கல், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக சமீபகாலமாக பூ மார்க்கெட் செயல்படாத நிலையில் கடந்த சில தினங்களாக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இருந்தாலும், இங்கு பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதால் பூக்கள் விற்பனையாக வில்லை. இதேபோல் பூக்களின் விலையும் அடியோடு சரிந்துள்ளது.
குப்பையில் கொட்டப்பட்ட பூக்கள்
ஊரடங்கிற்கு முன்பாக மல்லிகை பூ கிலோ ரூ.3ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. முல்லையும் இதே விலைக்கு விற்கப்பட்டது. குறிப்பாக கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரளிப் பூ, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ.10 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ரோஜா பூ ரூ.60, பட்டுப் பூ ரூ.20 ஆகிய விலைகளிலும் விற்கப்பட்டன. விலை மலிவாக இருந்த போதும் விற்பனை படு மந்தமாக இருந்ததால் ஏராளமான அரளிப் பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன. கோவில்கள் திறக்கப்பட்டால் தான் பூக்களின் விற்பனை அதிகரிக்கும் நியாயமான விலையும் கிடைக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story