மேலும் 48 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,464 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,319 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 121 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 619 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 54 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக மாவட்ட பட்டியலை விட மாநிலப்பட்டியலில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. பாதிப்பு சதவீதம் 2 ஆக உள்ளது.
Related Tags :
Next Story