உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஒரே வாரத்தில் 133 வழக்குகளில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஒரே வாரத்தில் 133 வழக்குகளில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
தினத்தந்தி 29 Jun 2021 6:59 PM GMT (Updated: 29 Jun 2021 6:59 PM GMT)

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஒரே வாரத்தில் 133 வழக்குகளில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுமலை,
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஒரே வாரத்தில் 133 வழக்குகளில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
தனி போலீஸ் படை
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றசசாங் சாய், சட்டவிரோத செயல்களை முழு அளவில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
இந்த நிலையில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொறுப்பேற்ற ஆர்.தேன்மொழிவேல் உடுமலை உட்கோட்டத்தில் சட்ட விரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.இதற்காக  தனிபோலீஸ் படையையும் அமைத்துள்ளார். 
இதுதவிர விபசாரத்தை ஒழிப்பதற்கு மகளிர் போலீசாரை கொண்ட தனிப்படையையும் அமைத்துள்ளார்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
உடுமலை உட்கோட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், தளி, அமராவதி நகர், குடிமங்கலம் ஆகிய 7 இடங்களில் போலீஸ் நிலையங்கள் உள்ளன. 
இதுதவிர உடுமலையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது.
உடுமலை உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 அவர்களிடமிருந்து 2,367 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாராயம் விற்பனை செய்ததாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடமிருந்து 1.5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வைத்து சூதாடியதாக 11 வழக்குகளில் 45 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 45 ஆயிரத்து 560 கைப்பற்றப்பட்டது.
புகையிலை பொருட்கள்
 தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக 14 வழக்குகளில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 573 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 பேர் மீதும், லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சேவல் சண்டை நடத்தியதாக 2 வழக்குகளில் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 4 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர விபசாரத்தில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இது ெதாடர்பாக 133 வழக்குகளில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் தெரிவிக்கலாம்
இந்த நிலையில் சட்ட விரோத நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
 சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றி தெரிந்தால் 9894513143 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் கொடுக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும். 
பொதுமக்கள் கொடுக்கும் தகவல்களைத்தொடர்ந்து உடனடியாக, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு  அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 சுவரொட்டிகள்
இந்த அறிவிப்பு சுவரொட்டியாக (ஸ்டிக்கர்) தயாரிக்கப்பட்டு உடுமலை மத்திய பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம், கொல்லம்பட்டறை, உழவர் சந்தை உள்ளிட்டு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. 
இதேபோன்று உடுமலை உட்கோட்டத்திற்குட்பட்ட 7 போலீஸ் நிலையங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் முக்கிய இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

Next Story