மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து அறிய 840 பேரிடம் சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரிகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து அறிய 840 பேரிடம் சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரிகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து அறிய 840 பேரிடம் சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரிகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து அறியும் வகையில் குறிப்பிட்ட நபர்களுக்கு ரத்தப்பரிசோதனை நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறித்து அறிவதற்காக நான்கு குழுக்கள் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் கிராமப்புற செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு குழுவினர் 7 இடங்களில் தலா 30 பேரிடம் குலுக்கல் முறையில் ரத்த மாதிரிகள் சேகரிப்பார்கள். சிறுவர்கள், பெரியவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்படும். நேற்று முதல் ஒரு வார காலத்துக்கு இவர்கள் இந்த பணியை மேற்கொள்வார்கள்.
ரத்த மாதிரிகள் சேகரிப்பு
மொத்தம் நான்கு குழுக்கள் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 28 இடங்களில் தலா 30 பேர் என 840 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பார்கள். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 9 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது. நேற்று ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியில் 30 பேரிடம் மருத்துவ குழுவினர் ரத்த மாதிரி சேகரித்தார்கள். இவ்வாறு மொத்தம் 28 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ரத்தம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story