பிளஸ்-1 மாணவி கடத்தல் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


பிளஸ்-1 மாணவி கடத்தல் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Jun 2021 12:48 AM IST (Updated: 30 Jun 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவி கடத்தல் வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:

பிளஸ்-1 மாணவி மாயம் 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெய்னூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த  26-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதில், ‘காவேரிப்பட்டணம் அருகே உள்ள நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் சூர்யா (வயது 20) என்பவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களின் மகளை கடத்தி சென்று விட்டார். அதற்கு பாலேகுளி செலசனாம்பட்டி ஜெகநாதன் (35), முத்து லட்சுமி (27), பழனியம்மாள் (46) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே எங்கள் மகளை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
4 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் பேரில் சூர்யா, ஜெகநாதன், முத்துலட்சுமி, பழனியம்மாள் ஆகியோர் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே மாயமான சிறுமியை போலீசார் மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story