154 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 154 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 154 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
ரோந்து பணி
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கூமாபட்டி பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்து வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்ேபரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருத்தப்பாண்டி, பாபு, மணிகண்டன், கருணாகரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர், கூமாபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 52 மது பாட்டில்களும் மானகசேரி பகுதியில் 18 மது பாட்டில்களும், கூமாபட்டி பகுதியில் 84 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
6 பேர் கைது
இதையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மங்காபுரம் தேவர் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 42), கல்லணை ஓடை தெருவைசேர்ந்த கருப்பசாமி (38), வடக்குத்தெரு மானகசேரியை சேர்ந்த குருவைய்யா (38), கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (54), பாரதியார் காலனியை சேர்ந்த விஜயகுமார் (33) உள்பட 6 பேர் சேர்ந்து விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 154 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story