தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதால் நிறுவனத்தினர் உற்சாகம்
தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதால் நிறுவனத்தினர் உற்சாகம்
திருப்பூர்:
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழில் நிறுவனத்தினர் உற்சாகமடைந்துள்ளனர். கோவை கே.ஜி. மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உடுமலையில் உள்ள அவஞ்யான் பவுல்ட்ரி நிறுவனத்தில் நேற்று 264 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் திருக்குமரன் மற்றும் முன்னாள் தலைவர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் கருவம்பாளையத்தில் உள்ள ஜே.ஜே. மில்ஸ் நிறுவனத்தில் 660 தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் நிறுவனத்தினர் பலர் கலந்துகொண்டனர். பல்லடம் ரோட்டில் உள்ள துரை பேஷன் வியர் நிறுவனத்தில் நடந்த முகாமில் 198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாக பங்குதாரர்கள் ரமேஷ், முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் நல்லூர் வீசி எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பிராஸ்பர் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் நடந்த முகாமில் 198 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story