ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது இருசக்கர வாகனத்தை தள்ளுவண்டியில் வைத்து இழுத்து வைத்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story