பொதுமக்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணி தொடக்கம்


பொதுமக்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 30 Jun 2021 1:05 AM IST (Updated: 30 Jun 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய பொதுமக்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணி வரதராஜன்பேட்டை பகுதியில் தொடங்கியது.

வரதராஜன்பேட்டை:

ரத்த மாதிரி சேகரிப்பு
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சுகாதாரத்துறை சார்பாக ரத்த மாதிரி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என கிராமத்திற்கு 30 பேர் என்ற வீதத்தில் இந்த பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தென்னூர் பகுதியில் பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 30 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் டாக்டர் சந்தியா ராஜலட்சுமி மற்றும் மருத்துவ குழுவினர் ரத்த மாதிரி சேகரிப்பில் ஈடுபட்டு, அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு உள்ளது, மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதன் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முகாமின்போது, கொரோனா வைரஸ் பற்றி எடுத்து கூறப்பட்டது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story