சிறுமிக்கு திருமணம் கணவர் மீது வழக்குப்பதிவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 30 Jun 2021 1:06 AM IST (Updated: 30 Jun 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு திருமணம் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்
கரூர் அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் 17 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக பரமத்தி வட்டார வளர்ச்சி அதிகாரி விஜய சாமுண்டீஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறுமியை திருமணம் செய்த வீராச்சாமி (வயது 32) மற்றும் சிறுமியின் தந்தை திருமலைசாமி (60) மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story