கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு


கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 1:33 AM IST (Updated: 30 Jun 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

பெரம்பலூர்:

20 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,034 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 10,627 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 8 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 5 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 5 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 2 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 210 பேரில் 147 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி
கொரோனாவிற்கு நேற்றைய அறிவிப்பின்படி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 94,341 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 13,238 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 1,277 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 929 பேருக்கும் என ஒரே நாளில் 2,206 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story