மோட்டார்சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி; வாலிபர் கைது


மோட்டார்சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2021 2:34 AM IST (Updated: 30 Jun 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சியில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர்.

கடையம்:
ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் பால்பாண்டியன், கணபதி மகன் தங்கதுரை ஆகியோர் விக்கிரமசிங்கபுரத்திலுள்ள ஒரு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் பணி முடிந்து இரவில் ஒரே மோட்டார்சைக்கிளில் ஆலங்குளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆழ்வார்குறிச்சி மெயின்ரோட்டில் வந்தபோது குடிபோதையில் வந்த 4 பேர், திடீரென மோட்டார்சைக்கிளை வழிமறித்து ரூ.1500 மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கீழாம்பூரை சேர்ந்த பிரமாச்சி மகன் கருத்தப்பாண்டி (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story