சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி மேலும் 302 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி மேலும் 302 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 Jun 2021 3:25 AM IST (Updated: 30 Jun 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் சேலம் மாவட்டத்துக்கு வருபவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 318 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று மேலும் 302 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் 46 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 103 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 20 பேரும், நகராட்சி பகுதிகளில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 127 பேருக்கும் கொரோனா நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
508 பேர் டிஸ்சார்ஜ்
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 87 ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 508 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் வீடு திரும்பினர்.
2 ஆயிரத்து 21 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேலத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,463 ஆக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story