பெட்ரோல்-விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2021 10:22 AM IST (Updated: 30 Jun 2021 10:22 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரத்தில் பெட்ரோல்-விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தாம்பரம், 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து பாடைகட்டி விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அதேபோல், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை கள்ளுக்கடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி பெரம்பூர் பகுதி செயலாளர் கல்தூண் ரவி தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.மகேந்திரன், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story