கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், பிரபல நடிகர் தியாகராஜன், தனது மகனும், நடிகருமான பிரசாந்துடன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரட்டிய ரூ.15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது, ரெயில்வே தொழிற்சங்கத்தலைவர் ஞானசேகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரன், வக்கீல்கள் சிவசண்முகம், பிரபாகர் மற்றும் சி.ஏ.ராஜ்குமார், சி.வி.அருண் பிரகாஷ், சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story