வாழவச்சனூரில் திட்டப்பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு
வாழவச்சனூரில் திட்டப்பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகில் உள்ள கொட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவச்சனூர் கிராமத்தில் கழிவறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியை, திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டரும் திட்ட இயக்குனருமான பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவறை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா, ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி மணிகண்டன், துணைத்தலைவர் பிரிதிவிராஜன், ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story